வனக்கிளியே..! ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'டோரதி'-ன் 'முத்துமணி' முழு வீடியோ பாடல் வெளியானது

'முத்துமணி' பாடல் முற்றிலும் மாறுபட்ட ஒரு 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலாகும்.
Dorathy- Muthumani song
Published on: 

இயக்குநர் கார்த்திக் துப்பார் மற்றும் இசைஞானி இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தை தம்மம் ஃபிலிம்ஸ் சார்பில் கார்த்திக் சுப்பராஜும் இயக்கத்தில், சிக்யா என்டர்டெயின்மென்ட் சார்பில் குனீத் மோங்காவும், ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜோதி தேஷ்பாண்டேவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

மதுரையில் 1990 களின் முற்பகுதியில் நடக்கும் சம்பவங்களான சாதி பிரிவினைகள், ஆணாதிக்க சமுதாயம் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி கதைக்களம் அமைந்திருந்தது.

'டோரதி' படத்தில் கீர்த்தி சுரேஷ், சனாந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனைவரது நடிப்பும் பாராட்டுகளை பெற்றது.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த படம், 2026 டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ஹிட். குறிப்பாக, முத்துமணி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள முத்துமணி பாடலின் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

ராஜா டிரான்ஸ்

'முத்துமணி' பாடல் முற்றிலும் மாறுபட்ட ஒரு 'ராஜா டிரான்ஸ்' ரக காதல் பாடலாகும்.

இப்பாடலை இளையராஜாவே எழுதி, பிரபல பின்னணிப் பாடகி சுவேதா மோகனுடன் இணைந்து பாடியுள்ளார். பாடலோடு சேர்ந்து வெளியாகியுள்ள இதன் பிரத்யேக மியூசிக் வீடியோவை பாரத் முரளிதரன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X