மூஞ்சிய இப்படி வச்சிருந்தா MOOD எப்படி வரும்? - காதலிக்க நேரமில்லை படத்தின் Sneak Peek காட்சி வெளியீடு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை.திரைப்படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மூஞ்சிய இப்படி வச்சிருந்தா MOOD எப்படி வரும்? - காதலிக்க நேரமில்லை படத்தின் Sneak Peek காட்சி வெளியீடு
Published on

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக இத்திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ரவி மோகன், வினய் மற்றும் யோகி பாபு இடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஸ்பெர்ம் டொனேஷன் கொடுக்க ஹாஸ்பிட்டல் வந்து அங்கு நடக்கும் நகைச்சுவை காட்சி இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com