டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

எம்பிபிஎஸ் படிப்பை முடித்து ஹவுஸ் சர்ஜரி செய்து கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா லட்சுமி மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.
ஐஸ்வர்யா லட்சுமி
ஐஸ்வர்யா லட்சுமி
Published on

தங்களது மகள் சினிமாவிற்குள் நுழைந்தது அவரது பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தங்களது கனவுகள் முற்றிலும் தகர்த்தெறியப்பட்டதாக அவர்கள் ஏங்கி தவித்தனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கட்டாகுஸ்தி 2’ படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றது. படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் மருத்துவ படிப்பை முடித்த ஐஸ்வர்யா லட்சுமி சினிமாவில் அறிமுகமானது எப்படி என்பது குறித்து இயக்குனர் அலெப்பி அஷ்ரப் கூறியதாவது:-

ஒரே மகள்

ஐஸ்வர்யா லட்சுமி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளான பெற்றோரின் ஒரே மகள். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட தங்கள் மகள் ஒரு மருத்துவராக வேண்டும். அவருக்கு ஒரு மருத்துவரை திருமணம் செய்து வைத்து குடும்பத்துடன் குழந்தைகளோடு வாழ வேண்டும் என்ற ஆசை ஐஸ்வர்யா லட்சுமியின் பெற்றோருக்கு இருந்தது. ஆனால் எம்பிபிஎஸ் படிப்பை முடித்து ஹவுஸ் சர்ஜரி செய்து கொண்டிருந்தபோது ஐஸ்வர்யா லட்சுமி மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.

இதைத்தொடர்ந்து சினிமாவிலும் அறிமுகமானார்.

தங்களது மகள் சினிமாவிற்குள் நுழைந்தது அவரது பெற்றோரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தங்களது கனவுகள் முற்றிலும் தகர்த்தெறியப்பட்டதாக அவர்கள் ஏங்கி தவித்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com