ஹிப்ஹாப் தமிழாவின் `கடைசி உலகப் போர்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது

ஹிப்ஹாப் தமிழா சமீபத்தில் `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் இருந்தார்.இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழாவின் `கடைசி உலகப் போர்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது
Published on

ஹிப்ஹாப் தமிழா சமீபத்தில் `கடைசி உலகப் போர்' படத்தை இயக்கி, நடித்து அப்படத்தை தயாரித்தும் இருந்தார்.

இப்படத்தை ஆதியின் ஹிப்ஹாப் தமிழா எண்டர்டெயின்மண்ட் தயாரித்துள்ளது.

இப்படத்தில் நாசர், நட்டி நட்ராஜ், முனிஷ்காந்த், ஷா ரா, அனாகா, அழகம் பெருமாள், சிங்கம்புலி, குமரவேல், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் நடராஜ் என்ற நட்டி மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மக்களால் பாராட்டைப் பெற்றது. திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது.

திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியானது. படத்தை திரையரங்கில் காண தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com