வருகிறான் கங்குவா - ஃபயர் சாங் அப்டேட்

சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்.திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
வருகிறான் கங்குவா - ஃபயர் சாங் அப்டேட்
Published on

சிறுத்தை சிவா தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இவர் பீரியாடிக் திரைப்படமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவாவின் முதல் பாடல் வரும் ஜூலை 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com