முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது - ஒன் 2 ஒன் டிரைலர்

பரமபதம் விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாக நடித்துள்ளார்.படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது - ஒன் 2 ஒன் டிரைலர்
Published on

சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலித்த பெருமையை பெற்றது. சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு பாகம் 2 மற்றும் சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதே சமயம் படங்களிலும் நடித்து வருகிறார்.

பரமபதம் விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

அதைத்தொடர்ந்து படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகியுள்ளது. டிரைலர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. அனுராக் காஷ்யப் மற்றும் சுந்தர் சி இருவருக்கும் உள்ள போட்டா போட்டி மற்றும் மைண்ட் கேமாக கதைக்களம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இப்படம் சுந்தர் சி நடிக்கும் 20 வது திரைப்படமாகும்.

அனுராக் காஷ்யப் லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் - ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com