லப்பர் பந்து படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு.. புகைப்படத்தை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்

திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.நடிகர் சிம்புவின் 48 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்
லப்பர் பந்து படக்குழுவை நேரில் பாராட்டிய சிம்பு.. புகைப்படத்தை பகிர்ந்த ஹரிஷ் கல்யாண்
Published on

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் மூன்றாவது வாரம் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

லப்பர் பந்து திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் சிம்பு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழரசன் இயக்குனர், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை சஞ்சனா ஆகியோர் சிம்புவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.

சிம்புவை சந்தித்த புகைப்படத்தை நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது சமூக வளைதள பக்கத்தில் பகிர்ந்து சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் 48 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்ததக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com