ஹரி ஹர வீரமல்லு படத்தின் `தாரா தாரா' பாடல் ரிலீஸ் அப்டேட்

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஹரி ஹர வீரமல்லு படத்தின் `தாரா தாரா' பாடல் ரிலீஸ் அப்டேட்
Published on

பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், வீரமல்லு படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், நான்காவது பாடலான தாரா தாரா வரும் மே 28 ஆம் தேதி காலை 10.20 மணிக்கு வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com