ஜன நாயகன் படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் அடுத்த திரைப்படம்

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
ஜன நாயகன் படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் அடுத்த திரைப்படம்
Published on

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.

அண்மையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு குட்டி கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. படத்தில் விஜய் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தைதொடர்ந்து எச்.வினோத் அடுத்ததாக நடிகர் துனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூசியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது மேலும் படத்தி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com