ஜி.வி. பிரகாஷின் ரெபெல் - புது அப்டேட் கொடுத்த படக்குழு

தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார்.மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான “ரெபெல்” வெளியாக உள்ளது.
ஜி.வி. பிரகாஷின் ரெபெல் - புது அப்டேட் கொடுத்த படக்குழு
Published on

ஜி.வி. பிரகாஷ் சமீபத்தில் வெளிவந்த கேப்டன் மில்லர் படத்திற்கு இசையமைத்து இருந்தார். கேப்டன் மில்லர் படத்திற்கு கூடுதல் போனசாக இருந்தது ஜி. வி. ப்ரகாஷின் இசை. மக்கள் அனைவராலும் பாராட்டு பெற்றது.

இவர் இசையமைத்த வா வாத்தி, கருப்பு நெரத்தழகி, மார்க் ஆண்டனி மற்றும் அடியே படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மக்கள் மனதில் எப்போழுதும் கேட்டுக் கொண்டே இருக்கும். சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர்கான தேசிய விருதை பெற்றார்.

இசையில் மட்டுமல்ல நடிப்பிலும் இவர் அசுரனாக வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான அடியே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முன்பு வெளியான பேச்சுலர் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்போது தனது 25 ஆவது படமாக உருவாகி வரும் கிங்ஸ்டன்-இல் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். மார்ச் 22 ஆம் தேதி இவரின் அடுத்த படமான "ரெபெல்" வெளியாக உள்ளது.அரசியல் ஆக்சன் டிராமா கதைக்களம் கொண்ட இந்த படத்தை நிகேஷ் இயக்கியுள்ளார்.

கேரளாவில் நடைப்பெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கபட்டுள்ளது. தமிழுக்காக போராடும் ஒரு இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ளார். பிரேமலு படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்ற மமிதா பைஜு இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மமிதா பைஜூ இந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மார்ச் 22-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலரை நாளை மாலை 5 மணிக்கு நடிகர் தனுஷ் வெளியிடுகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com