பிறந்தநாள் கொண்டாடும் கேங்ஸ்டர் வைபவ்

பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார்.
பிறந்தநாள் கொண்டாடும் கேங்ஸ்டர் வைபவ்
Published on

சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர். மேயாத மான் ஒரு ஃபீல் குட் படமாக அமைந்தது. மக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்ட படம். இதனால் வைபவின் புகழ் ஓங்கியது.

பின் பிப்ரவரி மாதம் ஷெரிஃப் இயக்கத்தில் வெளியான ரணம் அறம் தவறேல் நடித்தார். நந்திதா ஸ்வேதா மற்றும் டான்யா ஹோப் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர். இப்படம் வைபவிற்கு 25 ஆவது படமாகும். ரணம் அறம் தவறேல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கவுள்ளனர். படப்பிடிப்பு பணிகள் சென்ற வாரம் நிறைவடைந்தது. அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் வைபவை வாழ்த்தி படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படம் வெளியாகும் தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

X

Maalai Malar
www.maalaimalar.com