'கங்குவா' படத்தின் முதல் ரிவியூவ்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
'கங்குவா' படத்தின் முதல் ரிவியூவ்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனான சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மாபெரும் பொருட் செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கடந்த மாதம் வெளியான கங்குவா படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச் செய்தது.

இதற்கிடையில் ரஜினியின் வேட்டையன் பட ரிலீஸை ஒட்டி  கங்குவா படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. 10 மொழிகளில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படம் குறித்த முதல் ரிவியூவ் வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு முன்னதாக படத்தில் பணியாற்றியவர்களுக்கு படம் திரையிட்டு காட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் படத்தில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் விவேகா படம் பார்த்த அனுபவத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியதாவது, 'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்! இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம்! இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம்... இந்த படத்தில் பணியாற்றியதை நான் பெருமையாக உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com