சரத்குமாரின் 150 - வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இதுவரை நூற்றிருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், கடந்த ஆண்டு இவரது 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.
சரத்குமாரின் 150 - வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியீடு
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இதுவரை நூற்றிருக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தின் மூலம் சரத் குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அடுத்தடுது போலீஸ் கதாப்பாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கடந்த ஆண்டு இவரது 150- வது படமான தி ஸ்மைல் மேன் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகினார். இப்படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். தற்கு முன் மெமரீஸ் என்ற திரைப்படத்தை இயக்கியவராவார்.

சரத்குமார் இப்படத்தில் அல்சைமர் நோய்க்கு பாதிக்கப்பட்ட ஒரு ரிடையர்ட் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார், அவரது நியாபகம் அழிவதற்க்குள் அவர் ஒரு தொடர் கொலைகள் செய்த குற்றவாளியை பிடிக்க வேண்டும் இதை மையமாக படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர். சரத்குமார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com