ஒற்றை வார்த்தையில் ஃபயர் சாங் - புது ப்ரோமோ வெளியிட்ட படக்குழு

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா.வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.
ஒற்றை வார்த்தையில் ஃபயர் சாங் - புது ப்ரோமோ வெளியிட்ட படக்குழு
Published on

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் கங்குவா. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தின் முதல் பாடல் நாளைவெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது.

கங்குவா படத்தின் முதல் பாடல் ஃபயர் சாங் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த பாடல் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படுகிறது. தற்பொழுது இப்பாடலின் ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் பாடலை ஒற்றை வரியில் விவரிக்கின்றனர். அதில் சிங்கத்தின் கர்ஜனை, காட்டு தீ, வைப் என படக்குழுவினர் கூறுகின்றனர்.

இதனால் இப்பாடலிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com