பிரபல பாடகியின் கணவர் மாரடைப்பால் மரணம்

சமீபத்தில் மத்திய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. உஷா உதுப்பின் 2-வது கணவர் ஆவார்.
பிரபல பாடகியின் கணவர் மாரடைப்பால் மரணம்
Published on

இந்திய திரை உலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழ்ந்து வருபவர் உஷா உதுப். 1960-ம் ஆண்டு தொடங்கிய இவரது இசைப்பயணம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் மத்திய அரசு உஷா உதுப்புக்கு பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. உஷா உதுப், ஜானி சாக்கோ என்பவரை திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

உதுப் கணவரான ஜானி (வயது 78) நேற்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் உடலுக்கு அசவுகரியமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக அறிவித்தனர்.அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. ஜானி சாக்கோ, உஷா உதுப்பின் 2-வது கணவர் ஆவார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com