துல்கர் சல்மானின் ‘I'M GAME’ திரைப்பட ரிலீஸ் ஒத்திவைப்பு! புதிய அறிவிப்பு தேதியை வெளியிட்டது படக்குழு!

5 மொழிகளில் ஒரே நேரத்தில் திரைக்கு வரவுள்ளதால், இந்த ரிலீஸ் தள்ளிவைப்பு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
Dulquer Salmaan
Published on

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘ஐ அம் கேம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பான்-இந்திய அளவில் வெளியிட திட்டம்

படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை நாங்கள் அறிவோம், தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் திரைக்கு வரவுள்ளதால், இந்த ரிலீஸ் தள்ளிவைப்பு தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.

திரைப்படத்தின் கதைக்களம்

‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நஹான் ஹிதாயத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கயாடு லோகர், ஆண்டனி வர்கீஸ் மற்றும் முன்னணி இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேஃபாரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படம், பெரிய அளவிலான தியேட்டர் ரிலீஸை குறிவைத்து தற்போது செப்டம்பர் மாதம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com