டபுள் ஐஸ்மார்ட் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி.2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.
டபுள் ஐஸ்மார்ட் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொதினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2019ல் வெளியான இஸ்மார்ட் சங்கர் எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது. இந்த படத்தை விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் கடந்த மார்ச் 8-ம் தேதியே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இப்படம் ஆனது 2024 ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது. இதனை பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com