'டோரதி' ஒரு தலைச்சிறந்த படைப்பு- படக்குழுவினருக்கு தனுஷ் பாராட்டு

டோரதி படத்தை பார்த்த நடிகர் தனுஷ் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
Dorathy- Dhanush
Published on

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டோரதி' திரைப்படத்தை நடிகர் தனுஷ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள அவரது 10வது படம் ‘டோரதி’.

கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் நாளை (செப்.25) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், டோரதி படத்தை பார்த்த நடிகர் தனுஷ் படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

டோரதி - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஒரு தலைசிறந்த படைப்பு. துணிச்சலான, உணர்வுப்பூர்வமான படமாகவும், தீவிரமான கதைக்களத்துடனும் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு நடிகரும் அற்புதமாக நடித்துள்ளனர். நமது இசை மேஸ்ட்ரோ இளையராஜா சாரின் பின்னணி இசை உங்களை மெய்மறக்கச் செய்யும். இசைஞானி திரைப்படத்திலிருந்து ருத்ரதாண்டவம்.

நாளை வெளியாகும் இப்படத்தில், என் அன்பு நண்பர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com