கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?- இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

அமைச்சர் ஆனந்தின் பேச்சு வைரலாகி த.வெ.க. சார்பில் போட்டியிட தேர்தலில் சீட் கேட்ட இயக்குநர் யார்? என்பது பேசும் பொருளானது.
முதலமைச்சர் விஜய்- லோகேஷ் கனகராஜ்
முதலமைச்சர் விஜய்- லோகேஷ் கனகராஜ்
Published on
Summary

நான் ஏன் அதை கேட்க வேண்டும். அமைச்சர் என்.ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம் என பதில் அளித்தார்.

தமிழ்நாடு சட்டசபையில் நேற்று முன்தினம் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த ஒரு தகவல் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

சட்டசபையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், முதலமைச்சர் விஜய்யிடம் பிரபல இயக்குநர் ஒருவர் சீட் கேட்டார். ஆனால் அவர் கேட்ட தொகுதியில் நீண்ட காலமாக கட்சியில் பணியாற்றி வரும் மாவட்ட செயலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் இயக்குநரிடம் கூறிவிட்டதாக அமைச்சர் என்.ஆனந்த் பேசினார்.

அவரது பேச்சு வைரலாகி த.வெ.க. சார்பில் போட்டியிட தேர்தலில் சீட் கேட்ட இயக்குநர் யார்? என்பது பேசும் பொருளானது.

இயக்குநர் கேட்ட தொகுதி அமைச்சர் விக்னேசின் கிணத்துக்கடவு தொகுதி என தகவல் பரவியது. இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லோகேஷ் கனகராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், நான் ஏன் அதை கேட்க வேண்டும். அமைச்சர் என்.ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம் என பதில் அளித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com