Dhurandhar | முதல் நாள் வசூலில் சாதனை படைத்த துரந்தர் 2!

இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது.
Dhurandhar | முதல் நாள் வசூலில் சாதனை படைத்த துரந்தர் 2!
Published on

இந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் 'துரந்தர்'. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. ஆனால் இப்படம் முஸ்லிம்களை கெட்டவர்களாக சித்தரித்து எடுக்கப்பட்ட இந்துத்துவ பிரச்சார படம் என்று விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில், துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக "துரந்தர்: தி ரிவெஞ்ச்" (Dhurandhar: The Revenge) திரைப்படம் நேற்று (மார்ச் 19) வெளியானது. இந்தப் படம் ரிலீசுக்கு முன்பே முன்பதிவிலேயே பல கோடிகளை ஈட்டியிருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், "துரந்தர் தி ரிவெஞ்ச்" திரைப்படம் பிரீமியர் ஷோ மற்றும் உலகளவில் ரூ. 241-க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று வெளியான நிலையில், பல பகுதிகளில் இந்தப் படம் இந்தி தவிர்த்து மற்ற மொழிகளில் வெளியாகவில்லை. மேலும், ஏ சான்று பெற்ற நிலையிலும் துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் முதல் நாள் வசூலில் சாதனை படைத்துள்ளது. முதல் பாகத்தை போன்றே இந்தப் படமும் வசூலில் ரூ. 1000 கோடியை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com