பிரசவத்தை நினைத்து டென்ஷன்-தீபிகா படுகோனே

எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது. வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன்.
பிரசவத்தை நினைத்து டென்ஷன்-தீபிகா படுகோனே
Published on

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் தீபிகா படுகோனே அளித்துள்ள பேட்டியில், ''எனது கர்ப்பிணி வாழ்க்கை ஆர்வத்தை கிளப்புகிறது. இந்த வாழ்க்கையை அனுபவிக்கிறேன். குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க ஒவ்வொரு நாளையும் ஜாக்கிரதையாக கழிக்கிறேன்.

முன்பு எடை கூடாமல் இருக்க விரும்பிய உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தேன். ஆனால் இப்போது விரும்பிய எல்லா உணவுகளையும் சாப்பிடுகிறேன். நான் அதிகம் சாப்பிட்டால் என் குழந்தைக்கு நல்லது என்று டாக்டர் தெரிவித்தார்.

ஆனாலும் வீட்டில் தயார் செய்த உணவுகளை சாப்பிடுகிறேன். என் பெற்றோர் அடிக்கடி வந்து பார்த்து செல்கிறார்கள். குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை கழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

பிரசவம் செப்டம்பரில் இருக்கும் என்று டாக்டர் தெரிவித்து இருக்கிறார். பிரசவத்தை நினைத்து கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது'' என்றார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com