படத்தில் வில்லன்- நிஜ வாழ்க்கையில் நாயகனாக டேனியல் பாலாஜி

டேனியல் பாலாஜியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட உள்ளது.டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
படத்தில் வில்லன்- நிஜ வாழ்க்கையில் நாயகனாக டேனியல் பாலாஜி
Published on

தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்த டேனியல் பாலாஜி (48) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டு, அஞ்சலிக்காக புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

டேனியல் பாலாஜியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கண்கள் தானம் செய்ததன் மூலம் நிஜ வாழ்க்கையில் டேனியல் பாலாஜி நாயகனாகவே திகழ்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com