சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்

ஏப்ரல் 28 சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார்.
சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவர் சமந்தா.  முதன்முதலில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அவரது முன்னாள் கணவனான நாக சைத்தன்யாவுடன் இணைந்து 'யே மாயா சேசாவே' என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார். அதைத் தொடர்ந்து நான் ஈ, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல் போன்ற பிரபலமான படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் நடித்தார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சில நாட்களுக்கு முன் அவர் கலந்துக் கொண்ட 'எல்லே சஸ்டெயினபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் அவர் கருப்பு நிற கவுனை அணிந்திருந்தார். அவரது திருமண கவுனை மறு ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறத்தில் மாற்றி அணிந்திருந்தார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

ஏப்ரல் 28 { இன்று} சமந்தா அவரின் 37 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு திரைப்பிரபலமான சமந்தா, சின்மயி , விஜய் தேவரகொண்டா மற்றும் பலர் சமந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com