வைப் ஏற்றும் புதுப்பாட்டு.. 'மிதக்குது காலு ரெண்டும்' வீடியோ வைரல்

ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஜெயம் ரவி இந்த படத்தில் கார்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வைப் ஏற்றும் புதுப்பாட்டு.. 'மிதக்குது காலு ரெண்டும்' வீடியோ வைரல்
Published on

ஜெயம் ரவி தற்போது 'பிரதர்', 'ஜீனி' மற்றும் 'காதலிக்க நேரமில்லை' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'பிரதர்' திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.

'பிரதர்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இத்திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஜெயம் ரவி இந்த படத்தில் கார்த்தி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ஒரு அக்கா மற்றும் தம்பி பாசப்பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு சிறந்த குடும்ப பொழுதுபோக்கு படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மிதக்குது காலு ரெண்டும்' வீடியோ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com