ரத்த கறை படிந்த கைகள் - சொர்கவாசல் படத்தின் புது அப்டேட்

ஆர்.ஜே. பாலாஜி `சொர்கவாசல்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
ரத்த கறை படிந்த கைகள் - சொர்கவாசல் படத்தின் புது அப்டேட்
Published on

நடிப்பு, இயக்கம் என பிஸியாக இயங்கி வரும் ஆர்.ஜே. பாலாஜி சூர்யாவின் 45 வது படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி சொர்கவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளியானது.

பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இந்த படத்தை இயக்கி உள்ளார். படத்திற்கு சொர்கவாசல் என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குநர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளனர்.

படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜெயிலில் நடக்க கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது. ஆர்.ஜே பாலாஜி முற்றிலும் மாறுப்பட்ட தோற்றத்தில் காணப்படுகிறார்.

கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள போஸ்டரில் ரத்த கறை படிந்த கைகள் பிச்சை கேட்பது போல் அமைந்துள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com