கராத்தேவில் பிளாக் பெல்ட்- மகனின் போட்டியை ரசித்து பார்த்த சூர்யா

மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது.
கராத்தேவில் பிளாக் பெல்ட்- மகனின் போட்டியை ரசித்து பார்த்த சூர்யா
Published on

நடிகர் சூர்யாவின் மகன் தேவ், கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பங்கேற்ற சூர்யாவின் மகன், கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றார். மகன் தேவ்-ன் சண்டை காட்சியை நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் மொபைலில் வீடியோ எடுத்தனர்.

இதில் மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. அதில் நடிகர் சூர்யா மகன் தேவ்-ம் பிளாக் பெல்ட் பெற்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com