இயக்குநர் அவதாரம் எடுக்கும் பிக்பாஸ் ராஜு : எச்.வினோத் தயாரிப்பில் ஹீரோவாகவும் களம் இறங்குகிறார்!

முதன்முறையாகக் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடிக்கும் ராஜு ஜெயமோகன்; ஜியோஹாட்ஸ்டாரில் நேரடி வெளியீடு!
Raju, HVinoth
Published on

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 மற்றும் குக் வித் கோமாளி சீசன் 6 ஆகியவற்றின் மூலம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகர் ராஜு ஜெயமோகன், தற்போது தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் தொடங்க இருக்கிறார்.

நடிகர் ராஜு இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாகக் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும், இவரே படத்தின் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', அஜித்தின் 'துணிவு' ஆகிய படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் எச். வினோத் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ராஜு ஆரம்பகாலத்தில் எச். வினோத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்ற விரும்பினார்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இணைந்த புதிய பிரம்மாண்ட ஓடிடி தளமான 'ஜியோஹாட்ஸ்டார்' தளத்தில் இது நேரடியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, கவின் நடித்த 'நட்புனா என்னனு தெரியுமா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ராஜு, பிரபல இயக்குநர் பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும், பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com