இயக்குனர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

பெசன்ட்நகர் மின்மயானத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.
Bhagyaraj: Final procession begins
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான பாக்யராஜ் (73) நேற்று காலையில் திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

திரையுலகிற்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் மற்றும் லட்சக்கணக்கான ரசிகர்கள் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் உடலுக்கு இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் துப்பாக்கி ஏந்தி அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் தற்போது தொடங்கியுள்ளது.

நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவரது உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலியுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தை நோக்கி கொண்டு செல்லப்படுகிறது

அவரது இறுதி ஊர்வல வாகனத்தின் முகப்பு பகுதியில் 'அன்புடன் பாக்யராஜ் ' என எழுதப்பட்டு அவரது கையெழுத்து இடப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, காலை 11 மணிக்கு சென்னை பெசன்ட்நகர் மின்மயானத்தில் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படவுள்ளது.

அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு' போன்ற பல சாகாவரம் பெற்ற காவியங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் 'திரைக்கதை மன்னன்' என்று போற்றப்பட்ட கே.பாக்யராஜின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com