

நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் `BANG BANG'.
படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பப்லூ பிருத்வீராஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’தலைவர் தம்பி தலைமையில்’ படத்தை தயாரித்த கே.ஆர்.ஜி. கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்க, தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராகப் பணியாற்றி உள்ளார்.
‘பேங் பேங்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
ஜோம்பி த்ரில்லர் காமெடி வகையில் படம் உருவாகியுள்ளது டீசர் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. COWBOY வேடத்தில் பிரபுதேவா - வடிவேலு இருவரும் ஜோம்பிக்களுடன் சண்டையிடும் காட்சி டீசரில் இடம்பெற்றுள்ளது.
ஜெயம் ரவியின் மிருதன் படத்திற்கு பிறகு தமிழில் மற்றோரு ஜோம்பி படம் வருவது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.