'படே மியான் சோட் மியான்' : 10 நாளில் ரூ 88.25 கோடி வசூல்

ரூ. 350 கோடி செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டது.கடந்த 10 நாட்களில் இதுவரை ரூ.88.25 கோடி வசூல் பெற்றுள்ளது.
'படே மியான் சோட் மியான்' : 10 நாளில் ரூ 88.25 கோடி வசூல்
Published on

பாலிவுட் முன்னணி நடிகர்கள் அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் இணைந்து நடித்த இந்தி ஆக்ஷன் படம் 'படே மியான் சோட் மியான்'.இப்படத்தில் கதாநாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, மனுஷி சில்லர் ஆகியோர் நடித்தனர்.இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர் இந்த படத்தை இயக்கினார்.

படே மியான் சோட் மியான்" படம் மும்பை, லண்டன், அபுதாபி, ஸ்காட்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மனதை கவரும் இடங்களில் படமாக்கப்பட்டது.

இப்படத்தை வாசு பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், அலிஅப்பாஸ் ஜாபர் ஆகியோர் இணைந்து தயாரித்தனர். ரூ. 350 கோடி செலவில் பிரமாண்டமாக இப்படம் எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 11- ந்தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் 'ரிலீஸ்' செய்யப்பட்டது.படே மியான் சோட் மியான் படம் வெளியிட்ட தியேட்டர்களில் முதல் சில நாட்கள் 'ஹவுஸ்புல்' காட்சிகளாக இப்படம் ஓடியது. ரசிகர்கள் ஆர்வமுடன் படத்தை பார்த்தனர்.

மேலும் இப்படம் 'பாக்ஸ் ஆபீஸ்' வசூல் சாதனையாக கடந்த 10 நாட்களில் இதுவரை ரூ.88.25 கோடி வசூல் பெற்றுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com