`அவ கண்ணால பார்த்தா ஒரு Spark' - GOAT படத்தின் அடுத்த பாடல் வெளியீடு

இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
`அவ கண்ணால பார்த்தா ஒரு Spark' - GOAT படத்தின் அடுத்த பாடல் வெளியீடு
Published on

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலுக்கான ப்ரோமோ விடியோ நேற்று மாலை வெளியானது.

இப்பாடலிற்கு ஸ்பார்க் என தலைப்பிட்டுள்ளனர். பாடலின் லிரிக் வீடியோவை தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலி இணைந்து பாடியுள்ளனர். பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இதில் விஜய் மிகவும் இளம் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார். பாடலில் விஜயின் தோற்றத்தை டி ஏஜிங் தொழில் நுட்பத்தை உபயோகித்து இளம் தோற்றத்தில் காட்சி படுத்தியுள்ளனர்.

பாடலின் காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

https://iflicks.in/

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com