ஆகஸ்ட் மாதம் வெளியாகும் டிமான்டி காலனி 2

இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.இப்படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதம் வெளியாகும் டிமான்டி காலனி 2
Published on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி வெளியான டிமான்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து அறிவித்தார்.

இப்படத்தில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், 'டிமான்டி காலனி-2' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com