ஜம்ப்கட்ஸ் பிரபலம் ஹரி பாஸ்கர் நடிக்கும் "Mr.House Keeping"- ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட அட்லீ

இயக்குநர், ஹீரோ ஆகிய இருவருக்கும் இது முதல் படம்.படம் காமெடி கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்ப்கட்ஸ் பிரபலம் ஹரி பாஸ்கர் நடிக்கும் "Mr.House Keeping"- ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட அட்லீ
Published on

புதுமுக இயக்குநர் அருண் இயக்கத்தில் பிரபல யூடியூபர்"ஜம்ப்கட்ஸ்" ஹரி பாஸ்கர் மற்றும் பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா ஆகியோர் இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இயக்குநர் அட்லீ வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி புதிய படம் குறித்த அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். அதன்படி, ஜூலை 12ம் நாள் தேதி போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஓஷோ வெங்கட் இசையில், குலோத்துங்க வர்மன் ஒளிப்பதிவில், ராமசுப்பு படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இயக்குநர், ஹீரோ ஆகிய இருவருக்கும் இது முதல் படம். இருப்பினும், Mr.House keeping படம் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.

இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இதற்குமுன்னர் சில படங்களில் துணை இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் (சந்திரமுகி 2) பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தற்போது முதன்முறையாக ஒரு படத்தை தனித்து இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் அட்லீ வெளியிட்டுள்ள நிலையில், படம் காமெடி கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com