காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக "எமக்குத் தொழில் ரொமான்ஸ்" ரிலீஸ் ஒத்திவைப்பு

படம் வரும் நவம்பர் 15 [ வெள்ளிக்கிழமை] வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இன்னும் ஒரு வாரம் கனமழை பெய்யுமென வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக "எமக்குத் தொழில் ரொமான்ஸ்" ரிலீஸ் ஒத்திவைப்பு
Published on

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் காதல் நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள படம் "எமக்குத் தொழில் ரொமான்ஸ்". இப்படத்தை T Creations சார்பில் தயாரிப்பாளர் திருமலை தயாரித்துள்ளார்.

படம் வரும் நவம்பர் 15 [ வெள்ளிக்கிழமை] வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் தற்போது ரிலீஸை திடுதிப்பென படக்குழு தள்ளிவைத்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அன்புள்ள திரைப்பட ரசிக பெருமக்களுக்கும் திரையரங்க உரியைமாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் TCreations தயாரிப்பில் உருவான "எமக்குத் தொழில் ரொமான்ஸ்" என்கிற திரைப்படம் 15/11/24 வெள்ளிக்கிழமை அன்று வெளியிடுவதாக அறிவித்து இருந்தோம்.

தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒரு வாரம் கனமழை பெய்யுமென வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இந்தச் சூழலில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்கிற அச்சத்தில் இப்படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்றதும் விரைவில் படம் வெளியிடப்படும் படம் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

X

Maalai Malar
www.maalaimalar.com