சார்பட்டா 2 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்யா

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. பா. ரஞ்சித் சமீபத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார்.
சார்பட்டா 2 திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஆர்யா
Published on

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியான இப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த பசுபதி, ஜான் விஜய், ஜான் கொக்கேன், ஷபீர் ஆகியோரின் கதாபாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

1960- களில் வடசென்னையில் உள்ள இடியாப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குழுக்களுக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படத்தில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் அதில் உள்ள அரசியலையும் காட்டியிருந்தனர்.

பா. ரஞ்சித் சமீபத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை பாகம் இரண்டின் அப்டேட்டை நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

அவர் கூறியது படி அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com