தெறிக்க.. விடும் கிரியின் புது லுக் - லைக்குகளை வாரிக் குவிக்கும் அர்ஜூன் பட போஸ்டர்

அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.
தெறிக்க.. விடும் கிரியின் புது லுக் - லைக்குகளை வாரிக் குவிக்கும் அர்ஜூன் பட போஸ்டர்
Published on

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார். மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும் இப்படத்திற்கு 'சீதா பயணம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழில் அறிமுகமாகிறார்.

சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. படத்தில் கிரி என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் அர்ஜூன் நடித்துள்ளார். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் அவர் மிகவும் ஸ்டைலாக கழுத்தில் டாட்டூ போட்டுக்கொண்டு இருக்கிறார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com