சுந்தர் சி- க்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப் - ஒன் 2 ஒன் அப்டேட்

இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளனர்.படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது.
சுந்தர் சி- க்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப் - ஒன் 2 ஒன் அப்டேட்
Published on

சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 2024 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் 100 கோடி வசூலித்த பெருமையை பெற்றது. சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு பாகம் 2 மற்றும் சில படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார். அதே சமயம் படங்களிலும் நடித்து வருகிறார்.

இயக்குநர் கே.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர் சி நாயகனாகவும், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் "ஒன் 2 ஒன்" படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இப்படத்தை குறித்து புதிய அப்டேட் வந்துள்ளது. படத்தின் டிரைலர் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுக் குறித்து வெளியிட்ட போஸ்டரில் சுந்தர் சி மிகவும் கோவத்துடன் காணப்படுகிறார். அனுராக் காஷ்யப் ஒரு முகமுடியை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அனுராக் காஷ்யப் லியோ படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தாலும், சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் அசத்தலான வில்லன் நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நடித்த விஜய் வர்மன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு - எஸ். கே.ஏ. பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன், படத்தொகுப்பு சி.எஸ். பிரேம் குமார், கலை இயக்கம் - ஆர். ஜனார்த்தனன் மேற்கொண்டுள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com