மீண்டும் அம்பானி குழுமத்துடன் கூட்டு - பிஸ்கட் விளம்பரத்தில் அஜித்குமார்!

சர்வதேச அளவிலான கார் பந்தயப் போட்டிகளில் அஜித் அணி கலந்துகொள்வதற்கு இந்தச் கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் முக்கிய நிதி உதவியாக அமைகிறது.
மீண்டும் அம்பானி குழுமத்துடன் கூட்டு - பிஸ்கட் விளம்பரத்தில் அஜித்குமார்!
Published on: 

பொதுவாகவே விளம்பர வெளிச்சத்தில் இருந்து விலகியிருப்பவர் நடிகர் அஜித்குமார். அதற்காகவே, அவரதுமீது ரசிகர்கள் தனி மதிப்பு வைத்துள்ளனர்.

ஆனால் சமீப நாட்களாக தனது ‘அஜித்குமார் ரேஸிங் அணி’யின் சார்பாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

கேம்பா

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி (Campa Energy)’, அஜித்குமார் கார் பந்தய அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக செயல்படுகிறது. இதனால் இந்த கூல்ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் அஜித்குமார் நடித்திருந்தார்.

ஆனால் நடிகர் அஜித்தின் இந்த தோற்றம் அவரது ரசிகர்களுக்கு பெரும்பாலும் மகிழ்ச்சியை அளிக்கவில்லை. இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அவரது ரசிகர்களாலேயே ட்ரோல் செய்யப்பட்டார்.

‘எங்க அண்ணனுக்கு ஒன்னுனா, எங்க அண்ணனயே அடிப்போம்’ என பலவாறு ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், ‘இன்டிபெண்டன்ஸ் பவர் அப்’ பிஸ்கட்டுடன் மீண்டும் அஜித்குமார் அணி கூட்டணி வைத்துள்ளதாக அக்குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் இந்த பிஸ்கட்டின் விளம்பர முகமாக அஜித் இடம்பெற்றுள்ளார்.

இன்டிபென்டன்ஸ் பவர் அப் பிஸ்கட்ஸ்

9 வகைகள்

இந்த பிராண்டின் பேரில் 9 பிஸ்கட் வகைகளை தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் அறிமுகப்படுத்துகிறது.

பவர் அப், மில்கி பவர், பட்டர் பிளிஸ், மேரி ப்ரைம், குளுக்கோஸ் பூஸ்ட், கோகோ, க்ரெம்யம் ஆரஞ்ச், க்ரெம்யம் சாக்கோ, கோகோ பர்பன் என ஒன்பது வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ரூ.5லிருந்து ரூ.125 என பல வடிவங்களில் இந்த பிஸ்கட்டுகள் கிடைக்கின்றன.

X