அஜித் குமாருக்கு Ferrari கையுறைகள் பரிசாக வழங்கி கெளரவிப்பு

அஜித்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார்.கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார்.
AjithKumar - Ferrari car
Published on

நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரியளவில் ஆர்வம் காட்டுபவர்.

கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார். இந்நிலையில் அஜித்குமாரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு பெராரி கையுறைகள் பரிசாக வழங்கப்பட்டது.

அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com