மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கும் அஜித் குமார்

அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார்.ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டியில் கலந்துள்ளார்.
மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கும் அஜித் குமார்
Published on: 

நடிகர் அஜித் நடிப்பு மட்டும் அல்லாமல் அவருக்கு கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரியளவில் ஆர்வம் இருக்கிறது என நமக்கு தெரிந்த விஷயமாகும். திரைப்படம் நடித்து அதன் இடையே பைக்கை எடுத்துக் கொண்டு நண்பர்களுடன் அவருக்கு பிடித்த இடத்திற்கு செல்லும் பழக்கமுடையர் நடிகர் அஜித் குமார்.

இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார். தி ஃபெடரேஷன் ஆஃப் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் இந்தியா அஜித் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்க யுரோப்பியன் ஜிடி4 சாம்பியன்ஷிப் ரேஸிங் ஈவண்டின் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

அஜித் குமார் இதற்குமுன் நடந்த தேசிய மோட்டார்சைக்கிள் ரேஸிங் சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப், ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் ஆகிய ரேஸிங் போட்டியில் கலந்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்த்ல் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com