ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யா.. ! என்னமா வளர்ந்து இருக்கிறார்..

இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார்
ஐஸ்வர்யாராய் மகள் ஆராத்யா.. ! என்னமா வளர்ந்து இருக்கிறார்..
Published on

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 - ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். 

பிரபல இயக்குனர்மணி ரத்னம் ' இருவர் ' படத்தில் தமிழில் அறிமுகமானார். இவர் 2007-ல் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 'ஆராத்யா' என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் குஜராத் ஜாம்நகரில் அம்பானி மகன் திருமண முந்தைய விழா கொண்டாட்டத்தில் ஆராத்யா புதிய சிகை அலங்காரத்தில் பங்கேற்றார்.அதை தொடர்ந்து நேற்று ஐஸ்வர்யா ராயின் தந்தை, கிருஷ்ணராஜ் ராய்,நினைவு தினத்தில் ஆராத்யா கலந்து கொண்டார்.

இதன் புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராம் இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.இந்த புகைப்படங்களில் தனது தாத்தாவின் போட்டோ முன் சிறுமி ஆராத்யா,ஐஸ்வர்யாராய், அவரது தாய் பிருந்தியாராய் நிற்பது போன்று இடம் பெற்று உள்ளது. 

ஐஸ்வர்யா தனது அப்பாவை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்வது வழக்கம்.இந்த ஆண்டும் இந்த நிகழ்ச்சியில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பார்த்து ரசிகர்கள் வியந்து உள்ளனர்.

மேலும் ஐஸ்வர்யாராய் போல ஆராத்யா அழகாக வசீகரமாக உள்ளார். மிகவும் நன்றாக வளர்க்கப்பட்டவளாகவும் இருக்கிறார் என புகழ்ந்து உள்ளனர்

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com