அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள்- சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு

அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார்.ஸ்ரீவாரி தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் படம் உருவாகிறது.
அதிதி ஷங்கருக்கு பிறந்தநாள்- சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு
Published on

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்திலும் நடித்தார்.

தற்போது அதர்வா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார். ஸ்ரீவாரி தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில் அதர்வாவுடன் அதிதி ஷங்கர் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்திலும் விஷ்ணுவர்தன் இயக்கும் நேசிப்பாயா திரைப்படத்திலும் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.

இந்நிலையில், இன்று அதிதி ஷங்கரின் பிறந்த நாள் முன்னிட்டு ஸ்ரீவாரி தயாரிப்பில் வெளியாகவுள்ள படத்தின் குழு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அதிதி ஷங்கருக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com