பெத்தி திரைப்படத்தில் கூடுதலாக 6 நிமிட புதிய காட்சிகள் இணைப்பு!

டிக்கெட் விலை குறைப்பு மூலம், படத்தின் வசூல் மூன்றாம் வாரத்தில் அதிகரிக்கும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.
Addition of 6 minutes of new scenes to the movie Peddi
Published on

ராம் சரண் நடிப்பில், இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ஜூன் 4 அன்று வெளியான திரைப்படம் 'பெத்தி'. இப்படத்தில் ராம் சரண் 'பெத்தி' என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தனது கிராமத்திற்கும், அங்குள்ள மக்களுக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு எமோஷனல் ஆக்ஷன் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. ராம் சரணின் நடிப்பு ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜுன் 4 அன்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆந்திராவில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள போதிலும், தெலங்கானாவில் இன்னும் எதிர்பார்த்த வசூலை எட்டவில்லை. மேலும், வெளிநாட்டு சந்தைகளிலும், வட இந்தியாவிலும் இப்படம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இப்படத்தில் ஜான்வி கபூர் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் "அளவுக்கு அதிகமாக கவர்ச்சியாக" சித்தரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு இயக்குனர் புச்சி பாபு சனா மன்னிப்பு கேட்டதுடன், அந்த சர்ச்சை வெடித்த சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கினார்.

தற்போது இந்த இழப்பை ஈடுசெய்யும் வகையிலும், ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு ஈர்க்கும் வகையிலும், 5 நிமிடங்கள் 56 வினாடிகள் நீளமுள்ள புதிய காட்சிகளை படக்குழுவினர் நேற்று முதல் இணைத்துள்ளனர். புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ள அதே வேளையில், பேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக நேற்று முதல் இப்படத்தின் டிக்கெட் விலையும் சாதாரண கட்டணத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பெரும் ஹிட்டாகியுள்ளன. இந்த புதிய காட்சிகள் மற்றும் குறைக்கப்பட்ட டிக்கெட் விலை மூலம், படத்தின் வசூல் மூன்றாம் வாரத்தில் அதிகரிக்கும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com