காதலில் விழுந்த நடிகை மீனாட்சி சவுத்ரி

மீனாட்சி சவுத்ரி ‘தி கோட்’ மற்றும் ‘சிங்கப்பூர் சலூன்’ ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.துல்கர் சல்மானுடன் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
காதலில் விழுந்த நடிகை மீனாட்சி சவுத்ரி
Published on: 

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமான மீனாட்சி சவுத்ரி தொடர்ந்து விஜய்யின் 'தி கோட்' மற்றும் 'சிங்கப்பூர் சலூன்' ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

துல்கர் சல்மானுடன் நடித்த 'லக்கி பாஸ்கர்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பிரபல நடிகையாக உயர்ந்து இருக்கிறார்.

இந்த நிலையில் மீனாட்சி சவுத்ரியும், தெலுங்கு நடிகர் சுஷாந்தும் காதலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் 'இச்சடா' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

சுஷாந்த் தெலுங்கு முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் சகோதரி மகன் ஆவார். நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா திருமணம் முடிந்ததும், இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com