சென்னையில் புதிய கார்ப்பரேட் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் நடிகர் STR!

படங்களில் பிஸியான சிம்பு தற்போது பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
Silambarasan
Published on: 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிலம்பரசன், சென்னையில் இன்று நடைபெற்ற ஒரு ஊடக நிறுவனத்தின் புதிய கார்ப்பரேட் அலுவலகத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

அலுவலகத் திறப்பு விழா

திரைத்துறை மற்றும் ஊடகத்துறையினர் முன்னிலையில் கோலாகலமாக அரங்கேறிய இந்த விழாவில், நடிகர் சிம்புவின் வருகை அங்கிருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

விழாவிற்கு வருகை தந்த நடிகர் சிம்புவை, ஊடக நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மலர்க்கொத்து கொடுத்து நெகிழ்ச்சியோடு வரவேற்றனர். அதன் பின்னர், பாரம்பரிய முறைப்படி ரிப்பன் வெட்டி அலுவலகத்தின் புதிய அத்தியாயத்தை சிம்பு தொடங்கி வைத்தார்.

புதிய அலுவலகத்தின் வளாகத்தை பார்வையிட்ட நடிகர் STR, அங்குள்ள நினைவுப் பலகையில் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்து பிரத்யேகமாகக் கையெழுத்திட்டார்.

இந்த அலுவலகத் திறப்பு விழாவில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்ட பிரத்யேகப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்திலும், சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியாகி ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகின்றது

ரசிகர்கள் வாழ்த்து:

அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சிம்பு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com