Vacation | குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan visits Singapore
Actor Sivakarthikeyan visits Singapore
Published on
Summary

நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'சேயோன்' திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com