தனுஷ் இயக்கும் ராயன்-ல் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்

ராயனில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
தனுஷ் இயக்கும் ராயன்-ல் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்
Published on

தனுஷ் நடிக்கும் தனது 50வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் வெளியிட்டது.

இந்நிலையில், இவர்களை தொடர்ந்து ராயன் படத்தில் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com