பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்.உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
Published on

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் டெல்லி கணேஷ். ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனித்துவ பாணியை பின்பற்றி சாதித்தவர் ஆவார். 

X

Maalai Malar
www.maalaimalar.com