72-வது தேசிய திரைப்பட விருதுகள்: ஜனாதிபதியிடம் இருந்து தனுஷ், ஜி.வி. பிரகாஷ் பெற்றுக் கொண்டனர்

ராயன் சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்டது.
தனுஷ்
தனுஷ்
Published on

இந்திய திரைப்படத்துறையின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குஜராத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இதுவரை ஜனாதிபதி மாளிகையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த தேசிய விருதுகள் விழா, நாட்டின் பிற மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் புதிய முடிவின்படி, முதன்முறையாக டெல்லிக்கு வெளியே குஜராத் மாநிலத்தில் உள்ள ஏக்தா நகரில் நடத்தப்பட்டது.

இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்று, 2024-ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

ராயன்

அமரன் படத்திற்கான சிறந்த பின்னணி இசை விருதை குடியரசு தலைவரிடம் இருந்து ஜி.வி. பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.

ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ்

சிறந்த தமிழ்படம் என்ற வகையில் ராயன் திரைப்படத்தை இயக்கியதற்காக நடிகர் தனுஷ் தேசிய விருதை பெற்றுக் கொண்டார்.

அனல் அரசு

சிறந்த சண்டை பயிற்சிக்கான விருதை அனல் அரசு மகாராஜா படத்திற்காக பெற்றுக் கொண்டார்.

பிரம்மயுகம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் மம்மூட்டி பெற்றுக் கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com