இதை சாத்தியமாக்கிய உங்க எல்லாருக்கும் கோடி நன்றிகள் - லப்பர் பந்து 50 நாள் கொண்டாட்டம்

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துள்ளது.
இதை சாத்தியமாக்கிய உங்க எல்லாருக்கும் கோடி நன்றிகள் - லப்பர் பந்து 50 நாள் கொண்டாட்டம்
Published on

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியான படம் லப்பர் பந்து. இந்த படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக லப்பர் பந்து திரைப்படம் பல வாரங்களை கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

திரைப்படம் இதுவரை 50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகி அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் முடிவடைந்த நிலையில். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் மற்றும் லக்ஷ்மன் குமாரை நேரில் சென்று பூங்கொத்தை கொடுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

X

Maalai Malar
www.maalaimalar.com